சந்தக்கவி ராமசாமி
தமிழறிஞரும் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் புலமை பெற்றவருமான சந்தக்கவி வி.எஸ்.என். இராமஸ்வாமி (81) காலமானார். இவர் மே 25, 1942ல் பிறந்தவர். தந்தை எம்.எஸ். நாராயண ஐயங்கார் தமிழாசிரியர். அவர் வழியில் இராமஸ்வாமியும் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துப் பயின்றார். சம்ஸ்கிருதத்திலும் தேர்ந்தார். மன்னார்குடி நேஷனல் ஸ்கூல் மற்றும் திருச்சி ஈ.ஆர். மேல்நிலை பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தி.வே. கோபாலய்யர், எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு உள்ளிட்ட பலருக்கு நெருக்கமாக இருந்தவர். சந்தம் பற்றி மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு பல கட்டுரைகள், நூல்களை எழுதியவர். பத்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களைத் தந்துள்ளார். பெரிய புராணத்தில் உள்ள சந்தங்களைப் பற்றி ஆய்வு செய்து இவர் எழுதிய நூல் முக்கியமானது. ஜோதிடம், கைரேகை, எண் கணிதம், மலர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆழ்ந்த புலமை பெற்றவர். பலருக்குத் தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் போதித்தவர். பலரை சந்தப் பாடல்கள் இயற்ற வைத்தார். அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டு ஊக்குவித்தார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் தன் மகன் இல்லத்தில் காலமானார்.

தமிழ் மேதைக்குத் தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com