புக்கர் விருதுப் பட்டியலில் பெருமாள் முருகனின் 'பூக்குழி'
பிரிட்டன் அல்லது அயர்லாந்தில் பதிப்பிக்கப்பட்ட புனைவு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு ஆண்டுதோறும் புக்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் ஆகியோர் கொண்ட நடுவர் குழு, புக்கர் விருதுக்குரிய படைப்பைத் தேர்வு செய்கிறது. ஆண்டுதோறும் மே மாதம் இந்த விருது அறிவிக்கப்படும்.

2023ம் ஆண்டில், 13 நூல்கள் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அவற்றுள் பெருமாள் முருகன் எழுதிய 'பூக்குழி' என்னும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Pyre' இடம் பிடித்துள்ளது. இந்தப் பதின்மூன்று நூல்களிலிருந்து ஆறு நூல்கள் இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டு, அதிலிருந்து ஒரு நூலுக்கு புக்கர் பரிசு வழங்கப்படும். ஐம்பதாயிரம் பவுண்டு பரிசுத்தொகை கொண்டது இவ்விருது.



© TamilOnline.com