'தேடல்' குறும்படம் வெளியீடு
சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் படமாக்கப்பட்ட 'தேடல்' குறும்படம் மே 7, 2023 அன்று வெளியிடப்பட உள்ளது.

அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தில், தாய்க்கும் டீன் ஏஜ் மகளுக்கும் இடையிலான உறவின் சிக்கல்களை மையமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள இந்தக் கதை அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருக்கும். இந்தக் குறும்படத்தை வெங்கட் அருணாசலம் எழுதி இயக்கி உள்ளார். இதில் ஜெயஸ்ரீ மணி வெங்கடாசலம், திலீப் ரத்னம், ரெய்னா சுப்பிரமணியன் ஆகியோர் நடித்துள்ளனர். 'தில்லானா' இசைக்குழுவை நடத்திவந்த முகுந்த் நரசிம்மன் இசை அமைத்துள்ளார்.



படத்தின் ட்ரெய்லர் பார்க்க:


குறும்படம்: தேடல்
நாள்: மே 7
நேரம்: மாலை 4 மணி, 5 மணி (இரண்டு காட்சிகள்)
இடம்: Serra Theatres,Milpitas
நுழைவுச் சீட்டு வாங்க: thejalsalounge.com

© TamilOnline.com