சி. லலிதா
இசை உலகில் புகழ்பெற்ற பம்பாய் சகோதரிகளில் ஒருவரான சி. லலிதா (84) காலமானார். இவர் கேரளாவின் திருச்சூரில் ஆகஸ்ட் 26, 1938 அன்று, சிதம்பர ஐயர்-முக்தாம்பாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். பம்பாய் மாதுங்காவில் பள்ளிக்கல்வி பயின்றார். பட்டப்படிப்பை தில்லி பல்கலைக் கழகத்தில் முடித்தார். சகோதரி சரோஜாவுடன் இணைந்து ஹெச்.ஏ.எஸ்.மணி, முசிரி சுப்பிரமணிய ஐயர், டி.கே. கோவிந்த ராவ் ஆகியோரிடம் இசை கற்றார்.

சி. லலிதா - சி. சரோஜா இருவரும் சென்னைக்கு வந்து கச்சேரிகள் செய்தனர். பம்பாயிலிருந்து வந்ததால் 'பம்பாய் சகோதரிகள்' என்று அழைக்கப்பட்டனர். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி எனப் பல மொழிகளில் பாடினர். மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி, சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி, தமிழிசைச் சங்கம் வழங்கிய இசைப் பேரறிஞர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனர். (மேலும் வாசிக்க)

உயர்நீதி மன்ற வழக்குரைஞரான என்.ஆர். சந்திரனை லலிதா மணந்தார். என் ஆர். சந்திரன் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியவர். லலிதா சந்திரன் முதுமை காரணமாக ஜனவரி 31, 2023 அன்று காலமானார்.

இசைவாணிக்குத் தென்றலின் அஞ்சலிகள்!

© TamilOnline.com