தெரியுமா?: ஸீரோ டிகிரி பதிப்பகப் போட்டிகள்
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பதிப்பகமான ஸீரோ டிகிரி பப்ளிஷிங் குரூப் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

நாவல் போட்டி
ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்பலாம். ஒரே நபர் நாவல், குறுநாவல் மற்றும் சிறுகதைப் போட்டிகளில் பங்கேற்கலாம். நாவலின் அளவு குறைந்தபட்சம் 30 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் 35 ஆயிரம் வார்த்தைகள் வரை இருக்கலாம்.
தேர்வு செய்யப்பட்ட 10 நாவல்களின் நெடும்பட்டியல் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப்படும். நெடும்பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 நாவல்களின் குறும்பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும். இப்போட்டியின் நெடும்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்படும் 10 நாவல்களையும் ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிடும்.

பரிசுத் தொகை:
முதல் பரிசு: ரூ. 1,00,000
இரண்டாம் பரிசு: 50,000
மூன்றாம் பரிசு: 25,000
நான்காம் பரிசு: 15,000
ஐந்தாம் பரிசு: 10,000

குறுநாவல் போட்டி
குறுநாவல் போட்டிக்கு ஒரு நபர் ஒரு குறுநாவல் மட்டுமே அனுப்பலாம்.
குறுநாவலின் அளவு குறைந்தபட்சம் 10 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் 14 ஆயிரம் வார்த்தைகள் வரை இருக்கலாம்.
தேர்வு செய்யப்பட்ட 5 குறுநாவல்களின் பட்டியல் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 5 குறுநாவல்களையும் ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிடும்.

பரிசுத்தொகை:தேர்ந்தெடுக்கப்படும் 5 குறுநாவல்களுக்கு தலா ரூ.20,000

சிறுகதைப் போட்டி
ஒரு நபர் ஒரு சிறுகதை மட்டுமே அனுப்பலாம். சிறுகதையின் அளவு குறைந்தபட்சம் 2 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் 4 ஆயிரம் வார்த்தைகள் வரை இருக்கலாம். தேர்வு செய்யப்பட்ட 10 சிறுகதைகளின் பட்டியல் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் 10 சிறுகதைகளையும் ஸீரோ டிகிரி பதிப்பகம் வெளியிடும்.

பரிசுத் தொகை:
தேர்ந்தெடுக்கப்படும் 10 சிறுகதைகளுக்கு தலா ரூ.10,000/-

பொதுவான விதிமுறைகள்
படைப்புகளை மின்னஞ்சலில், யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (word doc) அனுப்பவேண்டும். கையெழுத்துப் பிரதி, பி.டி.எஃப். (pdf) படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி zerodegreeaward@gmail.com.

முழு விவரங்களுக்குப் பார்க்க: www.zerodegreepublishing.com

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com