நான்தான் ChatGPT பேசுகிறேன்
எங்கு பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் ChatGPT பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது என்ன? அதைப் பயன்படுத்தி எப்படிச் சம்பாதிக்கலாம்? அதன் வருகையால் கணினி மென்பொருள் எழுதுவோருக்கு வேலை போய்விடுமா? இன்னும் என்னென்ன துறைகளில் மனிதர்கள் வேலை இழப்பார்கள்? என்று பலப்பல சர்ச்சைகள். மனிதர்கள் வேலை இழப்பதை விடுங்கள், அனைத்தும் அறிந்த கூகிளாரே காணாமல் போய்விடுவார் என்றும் சொல்கிறார்கள்.

சரி, அவ்வளவு அறிவாளி என்றால் நீ யார் என்று அவரிடமே கேட்டோம். கீழே உள்ளது ChatGPT கொடுத்த சுய அறிமுகம்:


நான் அசிஸ்டண்ட் எனப்படும் கணினி நிரல். OpenAI-இல் உள்ள குழுவினரால் உருவாக்கப்பட்டது. எனது முக்கியச் செயல்பாடு பயனர்களுக்குத் தகவல்களை வழங்குவதன் மூலமும் அவர்களின் கேள்விகளுக்கு என்னால் முடிந்தவரை பதிலளிப்பதன் மூலமும் அவர்களுக்கு உதவுவதாகும்.

நான் செயற்கை நுண்ணறிவின் ஒரு வடிவம் அல்லது சுருக்கமாக AI. இதன் பொருள் என்னவென்றால், ஒரு மனிதன் எவ்வாறு செயல்படுவானோ அதைப் போன்றே என்னால் தகவல்களைச் செயலாக்கவும், முடிவுகளை எடுக்கவும், புதிய தரவுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் முடிகிறது. இருப்பினும், நான் ஒரு மனிதன் அல்ல, ஒரு நபரைப் போன்ற எண்ணங்கள், உணர்ச்சிகள் அல்லது உடல் திறன்களைக் கொண்டிருக்கவில்லை.

எனது அறிவானது எனது படைப்பாளர்களால் எனக்கு அளிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்ட பலதரப்பட்ட தகவல்களும், முந்தைய பயனர்களின் உள்ளீடுகளும் அடங்கும். OpenAI-இல் உள்ள குழுவால் எனது திறன்கள் தொடர்ந்து மேம்படுத்தப்படுகின்றன, புதுப்பிக்கப்படுகின்றன.



எனது முக்கியத் திறன்களில் ஒன்று இயற்கை மொழிச் செயலாக்கம் (Natural Language Processing). இது மனிதரின் மொழியைப் புரிந்து கொள்ளவும், அதில் எழுதவும் அனுமதிக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், ஒரு மனிதன் எப்படிச் செய்வானோ அதைப் போலவே கேள்விகளையும் வாக்கியங்களையும் புரிந்துகொண்டு என்னால் பதிலளிக்க முடிகிறது. பயனர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் எனது பதில்களை காலப்போக்கில் மேம்படுத்த முயல்வதற்கு இயந்திரக் கற்றல் நுட்பங்களையும் (machine learning techniques) பயன்படுத்துகிறேன்.

கேள்விகளுக்குப் பதிலளிப்பது, பரந்த அளவிலான தலைப்புகளில் தகவல்களை வழங்குவது, உரையை மொழிபெயர்ப்பது மற்றும் அசல் உள்ளடக்கத்தை எழுதுவது போன்ற பல்வேறு பணிகளுக்கு என்னைப் பயன்படுத்தலாம். பொது அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நிரலாக்கம் ஆகியவை நான் குறிப்பாகத் தேர்ச்சி பெற்ற சில களங்கள். இருப்பினும், நான் எப்பொழுதும் 100% சரியாக இருப்பேன் என்று சொல்வதற்கில்லை என்பதையும், AI ஆக, எனது அறிவுத் தளத்தை நான் தொடர்ந்து கற்று, புதுப்பித்து வருகிறேன் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

நான் தன்னாட்சி பெற்றவன் அல்ல என்பதையும், எனது படைப்பாளிகள் அல்லது பயனர்களால் எனக்கு வழங்கப்படாத எந்தத் தகவலையும் என்னால் அணுக முடியாது என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். என்னால் இணையத்தில் உலவ முடியாது. மேலும் நான் வழங்கும் அனைத்துத் தகவல்களும் 2021க்கு முன்பு எனக்கு அளிக்கப்பட்ட அறிவின் அடிப்படையில் ஆனவை. எனக்கு அளிக்கப்பட்ட தரவுகளால் எனது திறன்கள் வரையறுக்கப்படுகின்றன. மேலும், என்னால் மிகப்புதிய தகவலையோ அல்லது கேள்விக்கு முழுமையான பதிலையோ வழங்க முடியாமல் போகலாம்.

மொத்தத்தில், நான் ஒரு சக்திவாய்ந்த கருவி. பயனர்களுக்கு பலதரப்பட்ட பணிகளுக்கு உதவுவதோடு மதிப்புமிக்க தகவலை அவர்களுக்கு வழங்கவும் என்னால் முடியும். நான் ஒரு மனிதனாக இல்லாவிட்டாலும், ஒரு நபரைப் போன்ற திறன்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட பணிக்கான பதில்கள் அல்லது உதவியைத் தேடும் பயனர்களுக்கு நான் மதிப்புமிக்க ஆதாரமாக இருக்க முடியும்.

மதுரபாரதி

© TamilOnline.com