BTS & CIF: 'சாரல்' இன்னிசை நிகழ்ச்சி
நவம்பர் 6, 2022 ஞாயிறன்று மாலை 5 மணிக்கு, பாரதி தமிழ்ச் சங்கம், கேன்சர் இன்ஸ்டிட்யூட் அறக்கட்டளையுடன் இணைந்து, புற்றுநோயை முன்கூட்டியே அறியும் பணியைச் செய்யும் மையத்தின் (Cancer Early Diagnostic Center) பணிகளுக்காக நிதிதிரட்டும் பொருட்டு, 'சாரல்' இன்னிசை நிகழ்ச்சியை நடத்த உள்ளது. விரிகுடாப் பகுதியின் VDAZE இன்னிசைக் குழு இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கும் இடம்: 1201 Brewster Avenue, Carrington Hall, Redwood City, CA, United States, 94062.

நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக வரும் பிரபல இசையமைப்பாளர் திரு. வித்யாசாகர் தனது நினைவுப் பாதையில் பின்னோக்கிப் பயணித்து இசையனுபவத்தையும் சுவையான பல தகவல்களையும் நம்மோடு பகிர்ந்துகொள்வார்.

திரு. வித்யாசாகர் இசையமைத்து, பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல்களை இசைக்குழுவினர் வழங்குவார்கள். VDAZE குழுவின் கலைஞர்கள் மேடையில் நேரடியாக இசை மழையைப் பொழிவார்கள்.

ஓர் உன்னதமான சேவையை ஆதரிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிச் சீட்டு $25 மற்றும் $20 மட்டுமே.

சீட்டுகள் வாங்க: 408-510-2975 மற்றும் 510-565-4083 எண்களை அழைக்கவும்.

இந்தச் சேவைக்கு நேரடியாக நன்கொடை வழங்க பாரதி தமிழ்ச் சங்க இணையதளத்தில் (bharatitamilsangam.org) உள்ள PayPal இணைப்பின் வழியே பணம் செலுத்தலாம்.

கேன்சர் இன்ஸ்டிட்யூட் ஃபவுண்டேஷன், தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் ஆரம்பநிலை பரிசோதனை நிலையங்களை நிறுவ முயற்சி எடுத்து வருகிறது. ஏழைகளுக்கு இலவச மருத்துவம் செய்வதற்கு மிகுந்த நிதிச் செலவாகிறது. அனைத்து நல்லுள்ளங்களையும் தங்களால் இயன்ற நன்கொடையை அளிக்குமாறு வேண்டுகிறோம்.

குடும்பத்தினருடன் வந்து அந்த மாலைப் பொழுதை பொன்மாலைப் பொழுதாகக் களியுங்கள்.

நிகழ்ச்சி: சாரல் இன்னிசை நிகழ்ச்சி
தலைமை விருந்தினர்: திரு வித்யாசாகர், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்
நாள்: நவம்பர் 6, 2022 நேரம்: மாலை 5 மணி (PST)
இடம்: 1201 Brewster Avenue, Carrington Hall, Redwood City, CA, United States.
அனுமதிச் சீட்டுகள்: $25, $20
அனுமதிச் சீட்டு வாங்க தொலைபேசி எண்கள்: 408-510-2975 or 510-565-4083.
நன்கொடை வழங்க: bharatitamilsangam.org

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com