தெரியுமா?: வெளிநாடுவாழ் இந்தியர் தினம்
பிரவாசி பாரதீய திவஸ் (PBD) எனப்படும் வெளிநாடுவாழ் இந்தியர் தினம் 2023 ஜனவரி மாதம் 8 முதல் 10ம் தேதிவரை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் கொண்டாடப்படும் என்ற செய்தியச் சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம். அதற்கான அதிகப்படி விவரங்களை இப்போது தருகிறோம்.

இந்த மகத்தான விழாவில் தனிநபராகவோ அல்லது குறைந்தபட்சம் 10 பேர் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம். குழுவாகப் பங்கேற்பவர்களுக்கு விசேட சலுகைகள் உண்டு என்பதோடு, உங்கள் நாட்டின் தூதரகம் இதற்கு உதவிகளைச் செய்யும்.

பங்கேற்பு குறித்த உங்கள் எல்லா ஐயங்களுக்கும் விடைகள் pbdindia.gov.in/faq என்னும் சுட்டியில் கிடைக்கும்.

இந்தப் பெருவிழாவில் பங்கேற்க உலகெங்கிலும் இருக்கும் பாரதீயர்கள் ஆன்லைனில் பதிவு செய்துகொள்ள அணுக வேண்டிய வலை முகவரி

தங்குமிடத்தையும் முன்கூட்டி இந்தச் சுட்டியில் பதிவு செய்துகொள்ள முடியும்.

மேற்கண்டவை குறித்த தொழில்நுட்ப உதவிக்கு நீங்கள் tech.supportpbd@mea.gov.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com