அரங்கேற்றம்: நித்யஸ்ரீ மூர்த்தி
ஆகஸ்ட்13, 2022 அன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மாணவி நித்யஶ்ரீ மூர்த்தியின் பரதநாட்டிய அரங்கேற்றம் ருத்ராலயம் நடனப் பள்ளி சார்பாக இனிதே நிகழ்வுற்றது. நித்யஶ்ரீ தன் திறமிக்க நடனத்தின் வாயிலாக இந்தியப் பாரம்பரியத்தைக் கடல் கடந்து மணம் வீசும்படிச் செய்துள்ளார். தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் உளமார நேசிக்கும் மாணவி நித்யஶ்ரீக்கு வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், பள்ளிக் குழுமமும், பார்வையாளர்களும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

நித்யஶ்ரீயின் பரதநாட்டிய ஆசிரியர் திருமதி. மகாலக்ஷ்மி பாலாஜி அவர்கள் பெருமிதத்துடன் நடனத்தைக் கண்டுகளித்துச் சிறப்பித்தார். பரதக்கலையைத் தனக்கு அற்புதமாகக் கற்றுக்கொடுத்து ஊக்கம் ஊட்டிய ஆசிருயருக்கு மாணவி நித்யஶ்ரீ நன்றி தெரிவித்துக்கொண்டார். தமிழ் மொழி மற்றும் கலை மீதான இத்தகைய நேசத்தைச் சிறு வயதிலிருந்தே தங்கள் மகளுக்கு ஊட்டி வளர்த்த நித்யஶ்ரீயின் பெற்றோருக்கும் வாழ்த்துகள் குவிந்தன.

தகவல்: ஜயசுதா,
தென் கலிஃபோர்னியா

© TamilOnline.com