ஆன்மீகத்தில் ஈடுபட இதுவே சமயம்
கருமி ஒருவர் ஓட்டை வீட்டில் குடியிருந்தார். கூரை வழியே மழைத் தண்ணீர் வீட்டுக்குள் கொட்டிய போதும் அவர் சும்மாவே உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்து அண்டை அயலார் சிரித்தனர். கூரையைச் சரிசெய்யக் கூறினர்.

மழைக்காலத்தில், "மழை நிற்கட்டும், இப்போது எப்படிச் சரிசெய்வது?" என்றார் அவர். மழை நின்ற பிறகு, "மழைதான் நின்றுவிட்டதே, இப்போது எதற்கு நான் கவலைப்பட வேண்டும்?" என்றார்.

மழை நிச்சயம் வரும், அது வந்தபின் கஷ்டப்படாதீர்கள். இப்போதே கூரையைச் செப்பனிடுங்கள். அதாவது, இப்போதே ஆன்மீக அரிச்சுவடியையும் மற்ற ஆன்மீக நூல்களையும் படியுங்கள். முதல் பாடங்களான மௌனம், பிரார்த்தனை, நாம ஜபம் ஆகியவற்றைத் தொடங்குங்கள்.

ஆன்மீகத்தில் ஈடுபட இதுவே சமயம்.

நன்றி: சனாதன சாரதி,, மே 2022

பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா

© TamilOnline.com