தெரியுமா?: இந்திய அரசின் 'நாரீ சக்தி புரஸ்கார்'
விதிவிலக்கான சூழலிலும் சமூகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதிகாரமளிப்பதில் சிறந்த தொண்டாற்றும் மகளிருக்கு இந்திய நடுவண் அரசு 'நாரீ சக்தி புரஸ்கார்' என்னும் விருதை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

2023ஆம் ஆண்டில் இந்த விருதுக்கு நீங்கள் தகுதியுள்ள மகளிரின் பெயரைப் பரிந்துரைக்க விரும்பினால் www.awards.gov.in என்ற சுட்டியில் செய்யலாம். பரிந்துரை செய்ய இறுதி நாள்: 31 அக்டோபர் 2022.

இவ்விருது 2023ல் பன்னாட்டு மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாளன்று வழங்கப்படும்.

நன்றி: டாக்டர் அருண் சபர்வால்,
இந்திய தூதர், சான் பிரான்சிஸ்கோ

© TamilOnline.com