தெரியுமா?: 'லக்ஷ்மி - நினைவில் நின்ற உணவுக் குறிப்பு' - வீடியோ போட்டி
அமெரிக்காவில் இருக்கும் தெற்காசியர்களுக்கு அருமையான உணவுப் பொருட்களை 50 ஆண்டுகளாக வழங்கி வருகிறது 'லக்ஷ்மி' (www.laxmihos.com). லக்ஷ்மி பிராண்டு பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டில் எண்ணற்ற உணவுகளைத் தயாரித்து உண்டிருப்பீர்கள், விருந்துபசாரம் செய்திருப்பீர்கள். இதில் உங்கள் நினைவில் நின்ற உணவுப்பண்டம் எது என்பதை ஒரு வீடியோவாக எடுத்து அனுப்பி வாராந்திரப் பரிசுகளும் இறுதியாக மெகா பரிசும் வெல்வதற்கான வாய்ப்பை லக்ஷ்மி உங்களுக்கு தருகிறது;

1970ம் ஆண்டு G.L. சோனி தனது சகோதரர் K.L. சோனியுடன் இணைந்து ஜாக்சன் ஹைட்ஸ், NY தொடங்கினார். இவர்களுக்கு உந்துசக்தியாக இருந்தவர், புதிய நாட்டுக்குப் புதிதாக மணமாகி வந்து, உருளைக்கிழங்கும், யோகர்ட்டும் சாப்பிட்டு அலுத்துப் போன திருமதி. ஷோபனா சோனி. இவர்கள் House of Spices என்ற பெயரில் இந்தியாவின் பருப்பு வகைகள், மசாலாக்களைத் தருவித்து விற்கத் தொடங்கினர், அவற்றுடன் மாவு வகைகள், அரிசி, நெய், பழச்சாறுகள் ஆகியவையும் சேர்ந்துகொள்ளவே அமெரிக்காவின் தெற்காசியர் வீடுகளில் 'லக்ஷ்மி' பிராண்டு மிகவும் விருப்பத்துக்கு உரிய ஒன்றாகி விட்டது.

பொன்விழா ஆண்டின் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்ள 'நினைவில் நின்ற உணவுக் குறிப்பு (#LaxmiYadoonKiRecipe) என்ற இந்தப் போட்டியை அறிவித்துள்ளனர்.

முழு விவரங்களுக்கு: laxmihos.com/50-years-contest

© TamilOnline.com