ஏப்ரல் 2022: வாசகர் கடிதம்
மார்ச் 'தென்றல்' இதழ் ஹரிமொழியில் அர்ஜுனன் உத்தரகுமாரன் இடையிலான சம்பாஷணையில் அர்ஜுனனுடைய பத்துப் பெயர்களையும் அவை வரக் காரணங்களையும் விவரித்திருந்ததைப் படித்து மகிழ்ந்தேன்.

இறைவனுக்கே தம்மை ஒப்படைத்து வாழ்ந்த தேவரடியார்கள், இறைவனுக்கான பாடல்களைத் தாங்களோ, தங்கள் குடும்பத்தினரோ எழுதி, மெட்டமைத்து, தாமே பாடிக் கொண்டு நடனமாடவேண்டும் என்பன போன்ற விவரங்களை அற்புதமாகச் சொன்ன 85 வயது நிரம்பிய முத்துக்கண்ணம்மாள் அவர்களைப் பற்றி அற்புதமாக வெளியிட்டுள்ளீர்கள். சதிருக்கும் பரதநாட்டியத்திற்கும் உள்ள வேறுபாட்டை மிக அழகாகச் சொல்லியுள்ளார்.

இந்தியாவில் ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதல் பெண் எழுத்தாளர் கிருபா பாய் சத்தியநாதன் குறித்த முன்னோடி கட்டுரை அருமை. தென்றலின் அனைத்துப் பகுதிகளும் சுவையாக உள்ளன. நன்றி.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா

★★★★★


தென்றல் மார்ச் இதழில் எல்லாமே அருமை. குறிப்பாக, சதிர் நடனக் கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மா குறித்த தகவல் அற்புதம். சதிர் நடனத்துக்கும் பரத நாட்டியத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் அருமையாக விளக்கியிருந்தார். தொடர்ந்து வாசித்துவந்த முனைவர் சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் 'அன்புள்ள சிநேகிதியே' இந்த இதழில் இல்லாதது வருத்தம். இளம் பாடகி ஸ்வராத்மிகா ஸ்ரீகாந்தின் நேர்காணல் அருமை, அழகு. 'அலமாரி' பகுதியில் வாரியார் குறித்த சம்பவத்தைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு வாசிக்கப் பெருமையாக இருந்தது.

கி. இரமேஸ்,
கோடம்பாக்கம், சென்னை - 24, இந்தியா.

© TamilOnline.com