யுவபுரஸ்கார்
இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் எழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் மாநில மற்றும் தேசிய அளவிலான விருதுகளை வழங்கிக் கௌரவித்து வருகிறது சாகித்ய அகாதெமி நிறுவனம். 35க்கு வயதுக்குட்பட்ட படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் யுவபுரஸ்கார் விருது வழங்குகிறது. கடந்த ஆண்டுகளில் இவ்விருதை ம. தவசி, மலர்வதி, அபிலாஷ் சந்திரன், கதிர்பாரதி, வீரபாண்டியன், லக்ஷ்மி சரவணக்குமார், மனுஷி, சுனீல் கிருஷ்ணன், சபரிநாதன், ஷக்தி உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். 2021ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது பெறுகிறார் கார்த்திக் பாலசுப்ரமணியன். தனது 'நட்சத்திரவாசிகள்' நாவலுக்காக இவ்விருது பெறுகிறார் அவர். என். ஆவுடையப்பன், சு. வேணுகோபால், நா.மு. தமிழ்மணி உள்ளிட்ட நடுவர் குழு இப்படைப்பை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது.

சென்னை மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் கார்த்திக், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர். நொய்டா, ஜோகனஸ்பர்க், சிட்னி முதலிய நகரங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஏற்கனவே இவரது 'டொரினோ', 'ஒளிரும் பச்சைக் கண்கள்' போன்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 'நட்சத்திரவாசிகள்' இவரது முதல் நாவல். விருது, செப்புப் பட்டயமும் 50,000 ரூபாய் பரிசுத் தொகையும் அடங்கியது.

விருதாளருக்குத் தென்றலின் வாழ்த்துகள்.

© TamilOnline.com