கஜானா
நகைச்சுவை கலந்த திகில் படம் இது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயணத்தையும், அந்த கஜானாவைக் காப்பாற்றி வரும் பேய்களின் அட்டகாசங்களையும் நகைச்சுவை கலந்து சொல்கிறது இப்படம். இயக்குநர் வேலு பிரபாகரன், யோகி பாபு, 'நான் கடவுள்' ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்டோர் இதில் நடிக்கின்றனர். கதை மற்றும் தயாரிப்பு: பிரபாதிஸ் சாம்ஸ். திரைக்கதை, வசனம்: இயக்குநர் சை. கெளதம் ராஜ். இயக்கம்: யாஷ். இசை: ஞானேஸ்வரன்.

அரவிந்த்

© TamilOnline.com