காமன் மேன்
இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக கன்னட நடிகை ஹரிப்ரியா தமிழுக்கு அறிமுகமாகிறார். விக்ராந்த், விதார்த் ஆகியோர் வில்லன்கள். இசை: ஜிப்ரான். இயக்கம்: சத்யதேவ். படம்பற்றி இயக்குநர், "இதுவரைக்கும் சசிகுமார் சார் வில்லேஜ் சப்ஜெக்ட் படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார். 'காமன்மேன்' அவருக்கு வேறொரு அடையாளத்தைக் கொடுக்கும். இது காமன்மேன் ஒருவரைப் பற்றிய கதை. எதார்த்தமான கதையாக சசிகுமாருக்கு இருக்கும்." என்கிறார். படத்தில் சசிகுமாருக்கு சினிமா சவுண்ட் இஞ்சினியர் வேடம் என்று கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com