ஒபாமா உங்களுக்காக
இப்படத்தில் பிரித்வி நாயகன், பூர்ணிஷா நாயகி. ஜனகராஜ், கே.எஸ். ரவிகுமார், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் உடன் நடித்துள்ளனர். இசை ஸ்ரீகாந்த் தேவா. நானி பாலா படத்தை இயக்குகிறார். படம் பற்றி இவர், "ஒபாமா என்றால் அமெரிக்க முன்னாள் அதிபர் என்று பலரும் நினைக்கலாம். 'ஒ' என்பது கதாநாயகனின் 'இனிஷியல்.' 'பாமா' என்பது கதாநாயகியின் பெயர். இன்றைய அரசியல் நிலவரத்தை நகைச்சுவையாகச் சொல்லும் படம் இது. நகைச்சுவையில் ஜனகராஜ் மீண்டும் கலக்கி இருக்கிறார்" என்கிறார். விஜய்சேதுபதி இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com