கணிதப் புதிர்கள்
1. 11, 30, 50, ... இந்த வரிசையில் அடுத்து வரவேண்டிய எண்கள் எவை, ஏன்?

2. ஐந்து முறை மட்டும் 3 என்ற எண்ணையும் கணிதச் சமன்பாடுகளையும் பயன்படுத்தி விடை 37 வரவழைக்க வேண்டும். இயலுமா?

3. 315 x 999
899 x 999
999 x 999
எந்தக் கருவிகளையும் பயன்படுத்தாமல் மேற்கண்ட எண்களின் பெருக்குத்தொகையை 30 விநாடிகளுக்குள் கூறிவிட முடியுமா?

4. அது ஒரு இரண்டு இலக்க எண். அதை ஒன்றோடு ஒன்று கூட்ட வரும் விடையின் நான்கு மடங்குதான் அந்த எண். அந்த எண்ணின் தலைகீழ் எண்ணைக் கூட்டி வரும் விடையின் ஏழு மடங்கும் அதே தலைகீழ் எண்தான் என்றால் அந்த எண்கள் எவை?

5. 140க்கு மேற்பட்ட வரிசையான நான்கு பகா எண்களின் கூட்டுத்தொகை 620 வருகிறது என்றால், அந்த எண்கள் எவை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com