3rd i - சான் ஃபிரான்சிஸ்கோ பன்னாட்டுத் தெற்காசிய திரைப்பட விழா
3rd i அமைப்பின் வருடாந்திர சான் ஃபிரான்சிஸ்கோ பன்னாட்டுத் தெற்காசிய திரைப்பட விழா நவம்பர் 12 முதல் 16ம் தேதிவரை இணையம் வழியே நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, ஃபிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தானியர் குறித்த சிறப்பான படங்கள் திரையிடப்படும். விவரம் கீழே:

கூழாங்கல்
இயக்கம்: P.S. வினோத்ராஜ்
(On Demand Nov 12-16)
இந்தப் படம் பல்வேறு பன்னாட்டு விழாக்களில் பரிசுகள் வென்றுள்ளது. தமிழ் நாட்டின் வறண்ட பகுதி ஒன்றில் வசிக்கும் வேலு என்ற ஏழைச் சிறுவன், அவனுடைய குடிகாரத் தந்தை, அவனுடைய அன்னையின் போராட்டம் என்று நம்மைக் கட்டிப் போடும் இந்தப் படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பபட்டுள்ளது.

THE LOYAL MAN
இயக்கம்: Lawrence Valin
(On Demand Nov 12-16)

பாரிஸ் தமிழர் நிழல் உலகில் ஓர் இளைஞனின் குற்றவாழ்க்கை தொடங்கலும் அவனது காதலும் எனத் திகட்டாமல் ஓடும் கதை இது. கள்ளர் கும்பலில் தனது தலைவனுக்கு விசுவாசமா, அவன் கடத்தி வந்துள்ள பெண்ணின் மீதான காதலா என்று போராடுகிறான் ஆதி. லாரன்ஸ் வலின் இதை இயக்கியதுடன் கதாநாயகன் ஆதியாகவும் நடித்துள்ளார்.

தனி நிகழ்ச்சிகளைப் பார்க்க - $4.99.
கட்டணமில்லா நிகழ்ச்சிகளும் உண்டு.

முழு விவரம் அறிய: www.thirdi.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com