தீபாவளி ஸ்பெஷல்
பாதாம் பர்ஃபி

தேவையான பொருட்கள்
பாதாம் - 1 கிண்ணம்
சர்க்கரை - 1 1/2 கிண்ணம்
பால்பௌடர் - 1/2 கிண்ணம்
கெட்டிப் பால் - 1/2 கிண்ணம்
நெய் - 1/2 கிண்ணம்
குங்குமப்பூ - சில இழைகள்

செய்முறை
பாதாமைத் தோல் நீக்காமல் மிக்ஸியில் பொடிக்கவும். பின்பு அதைப் பாலில் இட்லி மாவுபோல் கட்டிகள் இல்லாமல் கலக்கவும். நான்ஸ்டிக் அல்லது கனமான உருளியில், 1/2 கிண்ணம் நீரில் சர்க்கரையைச் சேர்த்து ஒரு கம்பிப் பாகு வரும்வரை கொதிக்கவிடவும். அதில் அரைத்த பாதாம், 1/4 கிண்ணம் நெய் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கிளறவும். பிறகு, பால்பவுடரை, சிறிது சிறிதாகத் தூவி, நன்கு (கட்டி, உருண்டை ஆகாமல்) கிளறவும்.

குங்குமப்பூவைப் பாலில் குழைத்து, மீதி நெய்யையும் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி, 2-3 நிமிடம் கிளறவும். நெய் தடவிய பெரிய தாம்பாளம் அல்லது பலகையில் கொட்டி, அப்பளக் குழவியால் சமமாகப் பரப்பி, துண்டுகளாக்கவும். பாதாமைத் தோலுடன், செய்வதால்,சத்தும் அதிகம். கலரும் நன்றாக இருக்கும்.

வசுமதி கிருஷ்ணஸ்வாமி

© TamilOnline.com