சனா ஸ்ரீ: கின்னஸ் சாதனை
சென்னை சுங்கத்துறையில், கூடுதல் கமிஷனராகப் பணியாற்றுகிறார் சமயமுரளி. இவரது மகள் சனா ஸ்ரீ. வயது 9. நான்காம் வகுப்பு படிக்கிறார். குழந்தைப் பருவம் முதலே மிகுந்த அறிவுக்கூர்மை கொண்டிருக்கும் இவர், தற்போது கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். முதலில், ஆசிய அளவில் சாதனை நிகழ்த்தினார். அதில், உலகம் முழுதும் உள்ள நாடுகளின் கொடிகளையும், அவற்றின் தேசிய விலங்குகளையும் 4:25 நிமிடங்களில் கூறி ஆசிய சாதனைப் புத்தகத்தில் (Asian World Records) இடம்பெற்றார்.இவரது சாதனை மகுடத்தில் மற்றுமோர் இறகு, தற்போது புதிதாக நிகழ்த்தியுள்ள கின்னஸ் சாதனை. ஒரே நிமிடத்திற்குள் 68 வகை எழுத்துருக்களை (World Fonts) அடையாளம் கண்டு, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன், 37 எழுத்துருக்களை அடையாளம் கண்டதே கின்னஸ் சாதனையாக இருந்தது. கிட்டத்தட்ட அதன் இரண்டு மடங்கை நெருங்கும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் சனா ஸ்ரீ.

டென்னிஸ், இசை இவற்றிலும் இவருக்கு ஆர்வம் அதிகம். படிப்பிலும் கெட்டி.


© TamilOnline.com