விக்ராந்த் ரோணா
14 மொழிகளில், 55 நாடுகளில், முப்பரிமாணத்தில், பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது இந்தப் படம். கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீட்டா அஷோக், ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் முக்கிய வேடமேற்றுள்ளனர். இசை: பி. அஜனீஷ் லோக்நாத். ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படமான இதை அனூப் பண்டாரி இயக்குகிறார். "விக்ராந்த் ரோணா ஒரு மர்மம் நிறைந்த கதாபாத்திரம். படத்தை உருவாக்கும் போது, இது மிகப்பெரிய பாத்திரம் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனால், சுதீப் இதில் கதாநாயகனாக வந்த பிறகு, அப்பாத்திரத்தின் பலம் மேலும் அதிகமாகிவிட்டது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com