நார்த்தங்காய்ப் பச்சடி
தேவையான பொருட்கள்

நார்த்தங்காய் - 1 (அ) 2
புளி - 1 எலுமிச்சை அளவு
உப்பு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
வெல்லம் - 1/2 கிண்ணம்
பச்சை மிளகாய் - 4
சாம்பார்ப் பொடி - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை

நாரத்தங்காயின் விதைகளை நீக்கியபின், துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், இவற்றுடன் சேர்த்து எண்ணெய்விட்டு வதக்கவும். பின் அதில் புளியைக் கரைத்துவிட்டு வேகவிடவும். சாம்பார்ப் பொடி போட்டுக் கொதிக்க விடவும்.

காய்வெந்ததும் வெல்லம் போட்டுக் கொதிக்கவிடவும். சேர்ந்து கொதித்ததும் இறக்கி வைக்கவும். கடுகு, பெருங்காயம் தாளித்தால் அற்புத மான பச்சடி தயார். வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் சிறந்த மருந்து. இதே போல் ஆரஞ்சுப் பழத்தோலிலும் செய்யலாம்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com