நிருத்யாஞ்சலியின் மூன்றாவது ஆண்டுவிழா
மார்ச் 20, 2005 அன்று நிருத்யாஞ்சலி நாட்டியப் பள்ளி (போலிங்ப்ரூக், இல்லினாய்) தனது மூன்றாவது ஆண்டுவிழாவை 'ஓம் நமசிவாய' என்ற சிறப்பான நடன நிகழ்ச்சியுடன் கொண்டாடியது. கிரேடர் சிகாகோவின் ஹிந்துக் கோவிலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

மூத்த மாணவிகளாகிய சுஷ்மா கோலா, சஞ்சனா ரவி, சிந்து பாலா, வைஷ்ணவி ரெட்டி, சிந்துரா பிசிபதி மற்றும் அனிதா பதி பஞ்சாக்ஷர ஒலியுடனும் 'நாகேந்த்ர ஹாராய' சுலோகத்திற்கான பதத்துடனும் நிகழ்ச்சியைத் தொடங்கினர். சிவனின் பிற வடிவங்களான மஹாதேவன், அர்த்த நாரீசுவரன், பூதநாதன், நடராஜன் ஆகியவற்றை அன்றைய நிகழ்ச்சி சித்தரித்தது. சிவன், பார்வதி மற்றும் கணபதியாக முறையே சங்கீதா செட்டியாத், வீணா ப்ரியா மற்றும் சிந்து பாலா பாத்திரமேற்றனர். அடுத்து 'நடனம் ஆடினார்' பாடலுக்கு நவரசங்களையும் டெசா தன்னிகரி, சுவாதி ரெட்டி, ஷெ·பி அலெக்ஸாண்டர், சங்கீதா செட்டியாத், வீணா ப்ரியா, வீணா கனியாலி மற்றும் ஆஷா வரகலயில் ஆகியோர் திறம்பட ஆடிக் காண்பித்தனர். இவர்கள் ஆடிய ஹிந்தோளத்தில் அமைந்த தில்லானா வெகு நேர்த்தி.

நிருத்யாஞ்சலி பள்ளியின் இயக்குனரான சுஷ்மிதா அருண்குமாரின் உழைப்பும், திறமையும் இவ்விழாவில் பங்குகொண்ட ஒவ்வொருவரின் செயல்பாட்டிலும் பளிச் சென்று தெரிந்தது. இவர் கலா§க்ஷத்ராவிலும் பத்மஸ்ரீ அடையார் கே. லக்ஷ்மண் அவர்களிடமும் தீவிரமாகப் பயின்றவர். இவருக்குக் கிருஷ்ண கான சபா 'பாலசரஸ்வதி விருது' கொடுத்துக் கவுரவித்துள்ளது. 1996-ல் துவங்கப்பட்ட நிருத்யாஞ்சலியில் பல மதத்தைச் சேர்ந்தவர்களும் மிக உயர்ந்த தரத்திலான நாட்டியக் கல்வியைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அதிக விவரங்களுக்கு: தொலைபேசி - 630.759.0253

மின்னஞ்சல் - nrithyanjali@yahoo.com

-

© TamilOnline.com