சேதுராமன் பஞ்சநதனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
புகழ்பெற்ற கணினி விஞ்ஞானியும் அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (U.S. National Science Foundation) இயக்குனருமான டாக்டர் சேதுராமன் பஞ்சநதன் அவர்களுக்கு, புட்டபர்த்தியில் (ஆந்திரப் பிரதேசம்) உள்ள ஸ்ரீ சத்திய சாயி உயர்கல்விக் கழகம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியது. ஆகஸ்ட் 24, 2021 அன்று, பல்கலைக் கழகத்தின் வேந்தர் திரு கே. சக்ரவர்த்தி (இ.ஆ.ப.) அவர்கள் இதனை வழங்கினார். கணினித் துறைக்குத் திரு பஞ்சநதன் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் சாதனைகளை கௌரவிக்கும் முகமாக இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் தகவலுக்கு | நிகழ்ச்சியின் காணொலி | தென்றல் நேர்காணல்

© TamilOnline.com