மாயத்திரை
மற்றுமொரு பேய்ப்படம். அசோக் கதாநாயனாக நடிக்க, சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜகுமாரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இயக்கம் : டி.சம்பத்குமார். படம் பற்றி இயக்குநர், "மாயத்திரை படத்தில் 26 நடிகர், நடிகைகள் பேயாக நடித்து இருக்கிறார்கள். தீங்கு செய்யாத பேயின் தியாகமும், பேரன்பும், குலதெய்வ வழிபாட்டின் சிறப்பும் படத்தில் இருக்கும். வில்லனும் பேய்தான். ஒரு தியேட்டரும் முக்கிய கதாபாத்திரமாக வருகிறது. பழி வாங்கலும், பயமுறுத்தலும் இல்லாத பேய்ப் படமாகத் தயாராகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத் தயாராகிறது" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com