ரங்கா
சிபிராஜ், நிகிலா விமல் முக்கிய ஜோடியாக நடிக்கும் படம் இது. இசை ராம் ஜீவன். இயக்கம் அறிமுக இயக்குநர் வினோத். தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா சொல்கிறார்: "பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது. முக்கியமான காட்சிகளை காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் படமாக்கி உள்ளோம். அதற்காக மிகவும் சிரமப்பட்டோம். அவலாஞ்சி எனப்படும் பனிச்சரிவு எங்களைத் தாக்கியது. சளைக்காமல் படப்பிடிப்பை முடித்தோம். காதல் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. சண்டை இயக்குனர் திலீப் சுப்புராயன் குழுவினர் அந்தப் பனிப் பிரதேசத்தைத் தங்கள் சண்டைக் காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பு ஆக்கினார்கள் என்றால் மிகையாகாது."

அரவிந்த்

© TamilOnline.com