காவி ஆவி நடுவுல தேவி
இப்படி ஒரு மாறுபட்ட தலைப்பில் உருவாகி வரும் படத்தில் யோகிபாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி, பிரியங்கா. உடன் தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, சிவசங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை வசனம் வி.சி. குகநாதன். இயக்கம் புகழ்மணி. 48 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'காசியாத்திரை' என்ற படத்தின் இரண்டாம் பாகம் இப்படம் என்றும், இதில் யோகிபாபு 11 வேடங்களில் நடிக்கிறார் என்றும் கிசுகிசுக்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com