பேய் மாமா
நகைச்சுவைப் படம் என்பதைப் பெயரைப் பார்த்தே யூகிக்கலாம். யோகிபாபு நாயகனாக நடிக்க உடன் மாளவிகா மேனன், ரமேஷ் கண்ணா, மனோபாலா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, நமோ நாராயணன், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "பேய் மாமா ஒரு திகில் படம். வில்லன் ஒரு வெளிநாட்டின் தீயசக்தியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு உயிரைக் கொல்லும் வைரஸ் கிருமியை உருவாக்கி அதன் மூலம் கோடிகளைச் சம்பாதிக்கத் திட்டமிடுகிறான். அவனுடைய முகமூடியைக் கிழித்து உலக மக்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் உள்ளூர் சித்த வைத்தியர் ஒருவர். அவரை வில்லன் கொன்றுவிடுகிறான். சித்த வைத்தியரின் ஆவி, கதாநாயகனுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றக் களம் இறங்குகிறது. இந்தக் கதை இப்போதைய காலகட்டத்துக்குப் பொருத்தமாக அமைந்து விட்டது" என்கிறார் இயக்குநர். இசை ராஜ் ஆர்யன். இயக்கம் ஷக்தி சிதம்பரம்.

அரவிந்த்

© TamilOnline.com