பகையே காத்திரு
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் படம் இது. ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கிறார். உடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார், சிவா ஷாரா, பாலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: சாம்.சி.எஸ். எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் A. மணிவேல். இவர் இயக்கிய 'காக்கி' என்னும் குறும்படம் மிகப் பரவலான கவனத்தைப் பெற்ற ஒன்று. சுவாரஸ்யமான திருப்பங்களைக் கொண்ட அதிரடி ஆக்‌ஷன் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com