சூர்யா - 40
படங்களுக்குப் பெயரைச் சூட்டாமல், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு, கடைசி நேரத்தில் பெயரைச் சூட்டுவது வழக்கமாகி உள்ளது. சூர்யா நாயகனாக நடிக்கும் திரைப்படம் 'சூர்யா - 40' என்ற அறிவிப்புடன் படமாக்கப்பட்டு வருகிறது. இது சூர்யா நடிக்கும் 40வது படமாகும். நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். உடன் சத்யராஜ், சூரி, திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி. இமான் இசை. கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் பாண்டிராஜ். "குடும்பப் பாங்கான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றிருக்கும் பாண்டிராஜ் இயக்கும் சமூகம் + குடும்பம் கலந்த படம் இது.

அரவிந்த்

© TamilOnline.com