டூசான் தமிழ்ச் சங்கம்: புத்தாண்டு விழா
ஏப்ரல் 17, 2021 அன்று டூசான் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை இணையம் வழியே கொண்டாடியது. அரிசோனா மாநிலத்தின் தனித்துவமான சோனோரன் பாலைவனப் பகுதியில் டூசான் நகரம் இரண்டாவது பெரிய நகரமாகும். டூசானில் சுமார் 50 தமிழ்க் குடும்பங்கள் உள்ளன, தமிழ்ச் சங்கம் தவிர, ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடமும் டூசான் நகரில் சில வருடங்களாக நடைபெற்று வருகிறது.அண்மையில் காலமான நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி சங்கத் தலைவர் திரு பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொடங்கினார். கே.பி.ஒய். புகஷ் நவீன் முரளிதர் சென்னையிலிருந்து தனது நகைச்சுவை/மிமிக்ரி நிகழ்ச்சியால் மகிழ்வித்தார். ஆன்லைன் விளையாட்டுகள், அமெரிக்காவின் 'அல்டிமேட் பாடும் நட்சத்திரம்' திருமதி துர்கா லட்சுமியின் பாடல் மற்றும் அமெரிக்காவில் வளர்ந்த இளைஞர் உறுப்பினர்கள் நடத்திய 'அமெரிக்காவில் தமிழ்ப் பண்டிகைகள் கொண்டாட்டம்' குழு விவாதம் ஆகியவை இடம்பெற்றன. தமிழ்ச்சங்கம் உறுப்பினர் நலனுக்காகச் சமீபத்தில் உருவாக்கிய வலைத்தளத்தையும் காட்சிப்படுத்தியது.

பாலு நடராஜன்,
டூசான், அரிசோனா

© TamilOnline.com