வீரப்பனின் கஜானா
இப்படி ஒரு வித்தியாசமான தலைப்பில் உருவாகி வரும் படத்தில் ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் சை. கௌதம்ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் இணைந்து எழுதிய கதைக்குத் திரைக்கதை வடிவம் கொடுத்து இயக்குகிறார் புதுமுக இயக்குநர் யாசின். யோகிபாபு புதையல் ஒன்றைத் தேடிக் காட்டுக்குச் செல்கிறார். மொட்டை ராஜேந்திரன் தனது குரங்கைத் தேடிச் செல்கிறார். ராஜேஷ், தேவா மற்றும் பூஜா மூவரும் காட்டைப் பார்க்கச் செல்கின்றனர். இந்தப் பின்னணியில், காடுகளின் பெருமையை த்ரில் + நகைச்சுவை கலந்து சொல்கிறது இந்தப் படம்.

அரவிந்த்

© TamilOnline.com