என்றாவது ஒருநாள்
விதார்த் - ரம்யா நம்பீசன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் படம். வெற்றி துரைசாமி இயக்குகிறார். இவர், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன். ராகவன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வைரமுத்து பாடல்களை எழுத, என்.ஆர். ரகுநந்தன் இசையமைக்கிறார். வெற்றி துரைசாமி, "உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டுவந்த இடப்பெயர்வு பற்றிய கதை இது. குடிநீர்ப் பஞ்சம், குழந்தைத் தொழிலாளர்கள், நல்ல எதிர்காலத்துக்காகக் காத்திருக்கும் மக்களின் சவால்களை எல்லாம் காட்சிகளாக்கி மக்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது" என்கிறார். என்றாவது ஒருநாள் நல்லது நடந்தால் சரிதான்!

அரவிந்த்

© TamilOnline.com