திரைப்பட விருதுகள்
67வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2019ம் ஆண்டில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'அசுரன்' படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடித்த 'தனுஷ்' சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுகிறார். சிறந்த துணை நடிகருக்கான விருதை, 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் மாறுபட்ட தோற்றத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதி பெறுகிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது டி இமானுக்குக் கிடைத்துள்ளது. 'விஸ்வாசம்' படத்திற்காக அவர் இவ்விருது பெறுகிறார்.



நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' திரைப்படம், இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது. இப்படத்தில் சிறந்த ஒலிக்கலவையைத் தந்தமைக்காக ரசூல் பூக்குட்டி விருது பெறுகிறார். சிறந்த ஜூரிக்கான விருதும் இப்படத்திற்குக் கிடைத்துள்ளது. 'கே.டி. என்கிற கருப்பு துரை' படத்தில் நடித்த நாக விஷால், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதைப் பெறுகிறார்.

கலைஞர்களுக்குத் தென்றலின் வாழ்த்துகள்

© TamilOnline.com