கணிதப் புதிர்கள்
1. 9, 16, 13, 13, 17, 10, 21, 7, ?, ?
கேள்விக்குறியிட்ட இடங்களில் வரவேண்டிய எண்கள் எவை, ஏன்?

2. ஒரு பண்ணையில் சில பறவைகளும் மிருகங்களும் இருந்தன. அவற்றின் தலைகளின் மொத்த எண்ணிக்கை 64. கால்களின் எண்ணிக்கை 160. அப்படியென்றால் மிருகங்கள் எத்தனை, பறவைகள் எத்தனை?

3. ஒன்று விட்டு ஒன்றாக உள்ள ஒன்பது வீட்டுக் கதவிலக்கங்களின் கூட்டுத்தொகை 999 என்றால் அந்த வீட்டின் எண்கள் என்னவாக இருக்கும்?

4. ராமனிடம் 60 பசுமாடுகள் இருந்தன. அவற்றில் 20 மாடுகள் தினமும் 2 கேலன் பால் கறக்கும். மற்ற 20 மாடுகள் தினமும் 3/4 கேலன் பால் கொடுக்கும். மீதமுள்ள மாடுகள் 1/4 கேலன் பால் மட்டுமே கொடுக்கும். ராமன் தனது மகன்கள் மூன்று பேருக்கும் மாடுகளின் எண்ணிக்கையும் அவை கறக்கும் பால் அளவு எண்ணிக்கையும் சமமாக இருக்கும்படிப் பிரித்துக் கொடுத்தான். அவன் எப்படிப் பிரித்துக் கொடுத்திருப்பான்?

5. ராமு, சோமு இருவரும் சகோதரர்கள். ராமுவின் வயதையும் அவன் தந்தையின் வயதையும் பெருக்கினால் 624 வருகிறது. சோமுவின் வயதையும் அவன் தந்தையின் வயதையும் பெருக்கினால் 780 வருகிறது. ராமுவை விட சோமு 3 வயது பெரியவன் என்றால், ராமு, சோமு, அவன் தந்தை ஆகியோரது வயதுகள் என்ன?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com