அன்பறிவு
ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் படம் இது. காஷ்மிரா கதாநாயகி. முக்கிய வேடத்தில் விதார்த் நடித்திருக்கிறார். உடன் நெப்போலியன், சாய்குமார், ஊர்வசி, சங்கீதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை: பொன் பார்த்திபன். இயக்கம்: புதுமுக இயக்குநர் அஷ்வின் ராம். "இப்படம் உறவுகளிடையேயான உணர்வுகளைக் கமர்ஷியல் அம்சத்துடன் சொல்லும். நடிகர் ஹிப் ஹாப் ஆதி கதாபாத்திரம் அனைத்து வயதினரையும் கவரும். அவர் வாழ்வில் மிக முக்கியத் திருப்புமுனையாக இருக்கும்" என்கிறார் இயக்குநர். இப்படத்தில் நடிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து சென்னை சென்று நடிக்கிறார் நெப்போலியன்.

அரவிந்த்

© TamilOnline.com