தடபுடலான சில வடகங்கள்
ஓம வடகம்

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 1 கிண்ணம்
ஜவ்வரிசி - 2 தேக்கரண்டி
ஓமம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு அலுமினியம்
ஃபாயில் - தேவையானது
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

செய்முறை

புழுங்கலரிசி, ஜவ்வரிசி இவற்றை 8 மணி நேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் வழவழப்பாக அரைக்கவும். ஓமம், உப்புப் போட்டுக் கலக்கவும்.

குக்கரில் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். வாய் அகன்ற பாத்திரத்தில் 1 கிண்ணம் நீர்விட்டுக் குக்கரில் வைக்கவும். அதை மேடுபள்ளமில்லாத தட்டினால் மூடவும்.

அலுமினியத் தாளில் (foil) சிறிதளவு நல்லெண்ணெய் தடவி தட்டின்மேல் வைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி மாவை ஊற்றி, மெல்லியதாக இட்டுக் குக்கரை மூடவும். 2, 3 நிமிடங்களில் ஆவியில் வடகம் வெந்துவிடும்.

வேறு ஒரு ஃபாயிலில் மற்றொரு வடகத்தை ரெடியாக இட்டு வைத்துக்கொள்ளவும். வடகம் சற்று ஆறியதும் ஒட்டாமல் எடுக்க வரும். இப்படி வேகவைத்த வடகத்தை நிழலில் அல்லது வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். வடகத்தைச் சுட்டோ அல்லது எண்ணெய்யில் பொரித்தோ சாப்பிடலாம்.

குறிப்பு: சிறு குழந்தைகளுக்கும், பிரசவித்த பெண்களுக்கும் வடகம் சுட்டு கொடுக்கலாம். உடலுக்கு ஆரோக்கியமானதும்கூட. வடகம் ஜவ்வரிசி சேர்க்காமலும் செய்யலாம்.

இந்திரா காசிநாதன்

© TamilOnline.com