வனம்
பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயிற்சி பெற்றவரும், பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் மிக்கவருமான ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கும் படம் 'வனம்.' வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். அனுசித்தாரா, ஸ்ம்ருதி வெங்கட் நாயகிகள். முக்கிய வேடங்களில் அழகம்பெருமாள், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீகண்டன் சொல்கிறார்: "இது, மறுபிறவி கதையம்சம் கொண்ட திகில் படம். கதாநாயகன் கல்லூரி மாணவர். கதாநாயகி காட்டுவாசி. இன்னொரு நாயகி, டாக்குமென்டரி படம் எடுப்பவர்" என்கிறார். சஸ்பென்ஸ் + ஆக்‌ஷன் + திகில் + த்ரில் கலந்து உருவாகும் இப்படத்திற்கு இசை ரோன் எதன் யோஹான்.

அரவிந்த்

© TamilOnline.com