அஷ்டகர்மா
நீண்ட இடைவெளிக்குப் பின் மாயாஜாலம் நிறைந்ததாக உருவாகி வருகிறது இப்படம். பிரபல தயாரிப்பாளர் எஸ். செயின்ராஜ் ஜெயினின் மகன் சி.எஸ். கிஷன் படத்தைத் தயாரிப்பதுடன், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். நந்தினி ராய், ஷ்ரிதா சிவதாஸ் கதாநாயகிகள். எல்.வி. முத்து கணேஷ் இசையமைக்க, விஜய் தமிழ்செல்வன் இயக்குநராக அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் கதாநாயகன் கிஷன் உளவியல் மருத்துவர் என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com