ஓங்காரம்
வயிற்றுப் பிழைப்புக்காக புரட்சியாளராக வேஷம் போடும் போலிப் போராளிகளையும், அவர்களுடைய போலிப் போராட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளக்குகிறது ஓங்காரம். ஏ.ஆர். கேந்திரன் முனியசாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர், ஏற்கனவே 'அய்யன்', 'சேதுபூமி' ஆகிய படங்களை இயக்கியவர். இளம் நடிகர்கள் யுகேஷ், வர்ஷா விஸ்வநாத் நாயக, நாயகியாக அறிமுகமாகின்றனர். உடன் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இசை மோனீஷ் பாரதி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஏ.ஆர். கேந்திரன் முனியசாமி.

அரவிந்த்

© TamilOnline.com