கோடியில் ஒருவன்
விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் புதிய படம் இது. ஆத்மிகா கதாநாயகி. உடன் சூப்பர் சுப்பராயன், ராமச்சந்திர ராஜூ, பிரபாகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடமேற்றுள்ளனர். பாடல்கள்: அருண்பாரதி, சுப்பு, மோகன் ராஜன். இசை: நிவாஸ் பிரசன்னா. படத்தின் படத்தொகுப்பாளர் பணியையும் செய்கிறார் விஜய் ஆண்டனி. இயக்கம் ஆனந்த்கிருஷ்ணன். அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிகளில், இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com