வேதாந்த வித்யா பீடம்: ஆண்டு விழா
டிசம்பர் 19, 2020 அன்று (மார்கழி 5) கலிஃபோர்னியா மாகாணத்தின் சன்னிவேல் நகரில் 13 ஆண்டுகளாக நடந்துவரும் வேதாந்த வித்யாபீடம் ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. இணையம் வழியே நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 60 குழந்தைகள் அவர்களது குடும்ப உறவுகள், சிறப்பு விருந்தினர்கள் என்று உலககெங்கிலுமிருந்து 120 பேர் கலந்துகொண்டனர். வேத விற்பன்னர் ஸ்ரீமான் கிருஷ்ணமாச்சார்யா ஸ்வாமிகள் தலைமை வகித்தார். திருமதி. ஸ்ரீப்ரியா குத்துவிளக்கு ஏற்றினார். செல்வி அர்ச்சிதா விஜயகுமார் பௌலி ராகத்தில் துதிப்பாடல் பாடினார். வித்யாபீடத்தின் ஸ்தாபகர் திரு பார்த்தசாரதி விழாவைத் துவக்கி வைத்தார்.

குழந்தைகளின் பாராயணம், வேதவிற்பன்னர்களின் அருள்மொழியுடன் விழா களைகட்டியது. சிறப்பு விருந்தினர் திரு கிருஷ்ணமாச்சார்யா ஸ்வாமிகள் சிறார்களின் பாராயண முறைகளைக் கண்டு, பாராட்டி ஆசீர்வதித்தார். வித்யாபீடத்தின் ஸ்தாபகர் குழந்தைகளுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம் கொடுத்து கௌரவித்தார். நிர்வாக இயக்குனர் திருமதி ரமா பார்த்தசாரதி, நிறுவனத்தின் இலக்கு மற்றும் அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டங்களை விவரித்தார். பீடம் சமூக அக்கறையுடன் பல வருடங்களாக தர்ம காரியங்களில் ஈடுபட்டு வருவதையும் விவரித்தார். திருமதி ஷைலஜா பிரஹாரராஜு மற்றும் ஸ்ரீமதி மைத்ரேயி ஸ்ரீனிவாசன் நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினர்.

வேதாந்த வித்யாபீடம் 4 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு பாரத கலாச்சாரத்தையும், ராம, கிருஷ்ண, விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் சுபாஷித சுலோகங்களையும், யோகமும் கற்ப்பிக்கிறது. 'கதை கேளு கிளப்' வழியே பன்முகத் திறமைகளை வளர்க்கிறது.

இணையதளம்: www.vedantapeetam.org

பார்த்தசாரதி வெங்கடவரதன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com