யுத்த காண்டம்
ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட படம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கும் இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். க்ருஷா குரூப் கதாநாயகி. உடன் சுரேஷ்மேனன், போஸ் வெங்கட், யோக் ஜேபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராக இருந்த ஆனந்த் ராஜன் படத்தின் கதை எழுதி இயக்குகிறார். படம் பற்றி இவர், "இது, யதார்த்த சினிமா. நேர்த்தியான வர்த்தகப் படமாகவும் இருக்கும். 50 நாள் ஒத்திகை பார்த்த பின்னரே படப்பிடிப்பைத் தொடங்கினோம். ஒரு விபத்தில் சிக்கிய கதாநாயகனும், கதாநாயகியும் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் காவல் நிலையம் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அவர்கள் ஏன் காவல் நிலையத்துக்குச் சென்றார்கள் என்பதுதான் கதை. படம் தொடங்கி ஐந்தே நிமிடங்களில் ரசிகர்கள் இதை சிங்கிள் ஷாட் படமென்பதை மறக்குமளவுக்குப் படம் இருக்கும்" என்கிறார். இசை ஹரி சாய்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com