விசித்திரன்
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'ஜோசப்.' அதன் தமிழ் மொழியாக்கமே விசித்திரன். இப்படத்தில் ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். இசை ஜி.வி.பிரகாஷ். மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்குகிறார். இயக்குநர் பாலா இப்படத்தைத் தயாரித்துள்ளார். "அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் முடிவு கொண்ட, மனித உடல் உறுப்புகள் கடத்தல் பற்றிய விறுவிறுப்பான கதை இது" என்கிறார் கோலிவுட் கோவிந்து.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com