சார்பட்டா பரம்பரை
ஆர்யா நடிக்கும் புதிய படம் இது. குத்துச் சண்டையை மையமாகக் கொண்டது. பா. ரஞ்சித் இயக்குகிறார். உடன் கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஜான் கோகேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவருமே கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு, குத்துச் சண்டை வீரர்களுக்குரிய கட்டான உடலமைப்பில் நடித்துள்ளனர். துஷாரா கதாநாயகியாக அறிமுகமாகிறார். பசுபதி முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். உடன் ஜான் விஜய், அனுபமா, காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஞ்சித்துடன் இணைந்து படத்திற்கான வசனத்தை எழுத்தாளர் தமிழ்ப்பிரபா எழுதியுள்ளார். இசை சந்தோஷ் நாராயணன். வடசென்னை மக்களின் வாழ்வியலை வித்தியாசமான கோணத்தில் சொல்லும் அதிரடி ஆக்‌ஷன் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com