அந்த நாள்
சிவாஜிகணேசன் நடிப்பில் ஒரு காலத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் அந்த நாள். அதே தலைப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தை விவி இயக்குகிறார். ஆர்யன் ஷாம் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஆத்யா, லீமா பாபு நடிக்கின்றனர். உடன் கிஷோர், ராஜ்குமார், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: என்.எஸ். ராபர்ட் சற்குணம். படு பயங்கர த்ரில் + திகில் படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து.

அரவிந்த்

© TamilOnline.com