க்ரியா ராமகிருஷ்ணன்
தமிழின் முன்னோடிப் பதிப்பாளர்களில் ஒருவரும், அகராதி தயாரிப்பில் பல புதுமைகளைச் செய்தவருமான 'க்ரியா' ராமகிருஷ்ணன் (76) காலமானார். அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, மௌனி, ந. முத்துசாமி, ஜி. நாகராஜன், பூமணி, திலீப்குமார், இமையம் போன்றோரின் படைப்புகளை வெளியிட்டவர். காஃப்கா, ஆல்பர்ட் காம்யு, அந்த்வான் து எக்ஸுபரி, ழாக் ப்ரெவர் போன்றோரின் நூல்கள் தமிழில் வாசகர்களுக்கு அறிமுகமாகக் காரணமானவர். பதிப்புலகில் தனக்கென்று தனித்துவமான பாணியைக் கையாண்டவர். புத்தக வடிவமைப்பில் பல புதுமைகளைச் செய்தவர். மொழிச்செம்மை, பிழையின்மை போன்றவற்றில் கவனம் செலுத்தி, ஒரு படைப்பை மேன்மேலும் செம்மைப்படுத்தி நூலாக்கம் செய்வதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர்.

கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அந்த நிலையிலும் மருத்துவமனையில் இருந்தபடியே, க்ரியா அகராதியின் மேம்படுத்தப்பட்ட படைப்பை வெளியிட்டார். சிகிச்சை பலனின்றிக் காலமானார்.

'க்ரியா' ராமகிருஷ்ணனுக்குத் தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com