யானை
"ஒரு பெண் திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது அந்த வீட்டிற்கு மகளாகப் போக வேண்டும், அதேபோல் ஒரு ஆண், தான் பெண் எடுத்த வீட்டிற்கு ஒரு மகனாக இருக்க வேண்டும்" என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகும் படம் யானை. மேற்குத் தொடர்ச்சி மலை படத்தில் நடித்த ஆண்டனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னணி நடிக, நடிகையர் உடன் நடிக்கின்றனர். மன்னங்காடு குமரேசன், எல்.எஸ். பிரபுராஜாவுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கும் இயக்குநர் தருண்கோபி, படத்தின் கதையை எழுதி இயக்குகிறார்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com