பெட்டிக்கடை
சமுத்திரகனி நாயகன். சாந்தினி நாயகி. முக்கிய வேடங்களில் வீரா, சுந்தர், அஸ்மிதா, வர்ஷா, மொட்டை ராஜேந்திரன், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை: மரியா மனோகர். இயக்கம் இசக்கி கார்வண்ணன். இப்படம் பற்றி இவர், "நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள்தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள். அந்தத் தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அந்தக் கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார். வியாபாரி-வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவுச் சங்கிலி இருக்கும். இந்தச் சங்கிலியை அறுத்து எறிந்தது கார்ப்பரேட் முதலாளிகள். ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவுச் சங்கிலி அறுபட்டது என்பதையும், கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே பெட்டிக்கடை" என்கிறார்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com